முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தமிழ்நதியின் "காத்திருப்பு"

அமெரிக்க எழுத்தாளர் ஜோடி பிக்கோவின் ‘The Story Teller’ என்ற நாவலில் மின்கா என்கின்ற ஒரு மூதாட்டியின் பாத்திரம் வருகிறது. மின்காவும் அவள் நண்பியான தரீஜாவும் தம்முடைய பதின்மங்களில் ஓஸ்விச் வதை முகாமில் நாசிக்களினால் அடைக்கப்படுகிறார்கள். முகாம் வாழ்க்கையில் மின்கா கதைகளை எழுத ஆரம்பிக்கிறாள். அக்கதைகள் அவளுக்கு மாத்திரமின்றி அந்த முகாமில் சிறைபிடிக்கப்பட்டிருந்த பலருக்குமே வடிகாலாக அமைந்துபோயின. ஆரம்பத்தில் அவள் கதைகளில் ஈர்க்கப்பட்ட ஒரு நாசிக் காவலன் மின்காவுக்கு போர்வையும் உணவும் கொடுக்க ஆரம்பிக்கிறான். ஆனால் ஈற்றில் அந்தத் தொடர்பே மின்காவின் நண்பி தரீஜாவின் மரணத்துக்கும் காரணமாகிவிடுகிறது. மின்காவும் கொலைக்களத்துக்கு அனுப்பப்பட்டாலும் இறுதிக்கணத்தில் எப்படியோ தப்பியோடி ஒரு வழியாக அமெரிக்காவைச் சென்றடைகிறாள்.
சமீபத்திய இடுகைகள்

சங்கச் சித்திரங்கள்

இந்த வருடத்தின் முதல் வாசகர் வட்டம் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 31ஆம் தேதி நடந்தது. ஜெயமோகன் அவர்களின் “சங்கச் சித்திரங்கள்”தான் கலந்துரையாடலுக்கான புத்தகம். "நமக்குத் தொழில் கவிதை" என்று சொன்ன பாரதியை பிடிக்கும் என்றாலும் கவிதைகளை இப்பொழுதுதான் எழுத்துக்கூட்டி படிக்கும் நிலையில் இருப்பவள். இதில் சங்க இலக்கிய கவிதைகள் பேசுபொருள். “கரை இரண்டானாலும் கடல் ஒன்றுதானே” “வீட்டில் இருந்து வயலுக்கு கொண்டு செல்லும் விதை ஓர் எதிர்பார்ப்பு. வீட்டுக்கு கொண்டு வரும் மலர் ஒரு நம்பிக்கை. இவை இரண்டுக்கும் நடுவே இரவுகளும் பகல்களுமாக காலமும் வாழ்க்கையும்” போன்ற ஜெயமோகனின் வரிகளில் மனம் தொக்கி நின்றாலும் மெல்ல மெல்ல கவிதையின்பால் திரும்பியது. “கல்பொரு சிறு நுரை” எனும் குறுந்தொகைப் பாடலை பற்றிய கட்டுரையை வாசிக்கும் பொழுது நமக்கு இப்படி ஒரு நல்ல தமிழ் ஆசிரியர் அமையவில்லையே என்ற வருத்தம் மேலோங்கியது. சங்க இலக்கிய கவிதைகளுக்கு எளிதான ஓர் அறிமுகம். ஆனந்த விகடனில் தொடராக வந்தது. (சுஜாதாவின் 401 காதல் கவிதைகளை நான் வாசித்ததில்லை.) சங்க இலக்கிய கவிதைகளை வாசித்தபொழுது தனக்கு ஏற்பட்ட உன்மத்தமான நிலையை ஜேகே விவ...

அறியப்படாத தமிழகம்

3வது வாசகர் வட்ட சந்திப்பை எதிர்பார்த்து ஞாயிறு மலர்ந்தது. அறிந்த முகங்களுடன் சில புதிய முகங்களும் புத்தகமும் புன்னகையுமாக வந்து அமர்ந்தனர். ஒரு சிறிய தன் அறிமுகத்தோடு கலந்துரையாடல் துவங்கியது. வாசகர் வட்டத்தின் செயல்பாட்டையும், அன்று பேசப்போகும் புத்தகத்தின் முன்பே பரிமாறிக்கொண்ட கருத்துகளையும் புதியவர்களுக்காக ஒருமுறை மீள்பார்வை பார்த்துவிட்டு மூன்றாவது அத்தியாயத்தை எடுத்துக்கொண்டோம்.   புத்தகம் எழுத்தாளர் தொ.ப. அவர்களின் "அறியப்படாத தமிழகம்'.   "தைப்பூசம்", பல நூற்றாண்டுகளாக இவ்விழா கொண்டாடப்பட்ட வரலாற்றை நூலாசிரியரின் ஆய்வுக் குறிப்போடு, இன்று தமிழ் நாட்டிலும் மற்றும் தமிழர்கள் வாழும் அயல் நாடுகளிலும் எவ்விதம் கொண்டாடப்படுகிறது என்று நிறைய கருத்துகளும், கேள்விகளும் முன்வைக்கப்பட்டது. அடுத்து "பல்லாங்குழி". தமிழர்களின் பண்டைய விளையாட்டுக்கள் , அதன் உட்கருத்து, வெற்றி, தோல்வி, சூதாட்டம் என பல புள்ளிகளில் வாசகர்கள் தங்கள் கருத்துக்களை விதைத்தனர். பேச்சின் சுவாரசியமும், கருத்துக்களின் ஆழமும் நேரத்தை விழுங்கிவிட்டன என்றே சொல்லவேண்டும். கலந்துகொண்ட அனைவரும் த...

ஒரு புளியமரத்தின் கதை

இரண்டாண்டுகளை எட்டிவிட்ட எங்கள் வாசகர் வட்டத்தின் கொண்டாட்டம்.  "அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு. விசாலப்பார்வையால் விழுங்கு மக்களை" என்றான் பாரதிதாசன். வாசிப்பு அதனை செய்கிறது. ஒரு பள்ளியோ, குடும்பமோ முழுவதுமாக கொடுத்திட முடியாத அந்த அனுபவத்தை வாழ்க்கையும் வாசிப்பும் தருகின்றது. இந்த மாதம் எங்கள் கைகளில் தவழ்ந்த புத்தகம் சுந்தர ராமசாமி அவர்களின் "ஒரு புளியமரத்தின் கதை".   முதல் பதிப்பை 50 ஆண்டுகளுக்கு முன்னர் வாசிக்கும் வாய்ப்பு பெற்ற மூத்த எழுத்தாளர் திரு.முருகபூபதி அய்யா, தனது நினைவில் மாறாது நின்ற சில காட்சிகளை பகிர்ந்துகொண்டார். அவரைத் தொடர்ந்து மற்ற வாசகர்களும் தத்தம் கருத்துகளை எடுத்துரைத்தோம். ஒரு நாவல் 50 சொச்சம் ஆண்டுகளைத் தாண்டியும் உயிரோட்டத்தோடு இருப்பது எளிதல்ல. மூன்று கால கட்டங்களில், அதாவது பிரபுத்துவம், காலனிய ஆட்சி மற்றும் ஜனநாயக ஆட்சி முறைகளைத் தாண்டி நிற்கும் அந்த புளிய மரம் ஒரு வரலாற்று சான்றாகவே திகழ்ந்திருக்கிறது. அத்தனை மாட்சிமையோடு இருந்த அந்த விருட்சம், தனி மனிதனின் வக்கிரங்களினால் தூண்டப்பட்டு, இரு வியாபாரிகளிடையே ஏற்படும் போட்டி மற்றும் பொ...

மெல்பேர்ன் வாசகர் வட்டம் முதல் சந்திப்பு

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் மெல்பேர்ன் வருகையின்போது வாசிப்பின் வாசனை எனும் தலைப்பில் ஒரு கூட்டத்தில் சிறிய நூலாக இரா. நடராஜன் அவர்களின் 'ஆயிஷா'வை அறிமுகம் செய்து மிக பெரிய தாக்கத்தை வாசகர்களிடம் ஏற்படச் செய்தார். அது மட்டுமின்றி வாசகர் வட்டம் எனும் தலைப்பில் வாசகர்கள் ஒரு நூல் குறித்து தங்களது கருத்துகளைப் பறிமாற்றம் செய்துகொள்ள வசதி செய்துதந்தார். அப்படி அவரால் அறிமுகம் செய்யப்பட்ட வாசகர் வட்டம் இரண்டாவது அமர்வாக தொ.ப அவர்களின் அறியப்படாத தமிழகம் எனும் ஆய்வு நூலை மையப்படுத்தி பல கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடிந்தது வாய்பை உருவாக்கிய MK அவர்களும் இனிமையுடன் இடமளித்த திருமதி சாந்தி சிவா அவர்களுக்கும் நன்றிகள் பல பல. - ராஜா