முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்நதியின் "காத்திருப்பு"

அமெரிக்க எழுத்தாளர் ஜோடி பிக்கோவின் ‘The Story Teller’ என்ற நாவலில் மின்கா என்கின்ற ஒரு மூதாட்டியின் பாத்திரம் வருகிறது. மின்காவும் அவள் நண்பியான தரீஜாவும் தம்முடைய பதின்மங்களில் ஓஸ்விச் வதை முகாமில் நாசிக்களினால் அடைக்கப்படுகிறார்கள். முகாம் வாழ்க்கையில் மின்கா கதைகளை எழுத ஆரம்பிக்கிறாள். அக்கதைகள் அவளுக்கு மாத்திரமின்றி அந்த முகாமில் சிறைபிடிக்கப்பட்டிருந்த பலருக்குமே வடிகாலாக அமைந்துபோயின. ஆரம்பத்தில் அவள் கதைகளில் ஈர்க்கப்பட்ட ஒரு நாசிக் காவலன் மின்காவுக்கு போர்வையும் உணவும் கொடுக்க ஆரம்பிக்கிறான். ஆனால் ஈற்றில் அந்தத் தொடர்பே மின்காவின் நண்பி தரீஜாவின் மரணத்துக்கும் காரணமாகிவிடுகிறது. மின்காவும் கொலைக்களத்துக்கு அனுப்பப்பட்டாலும் இறுதிக்கணத்தில் எப்படியோ தப்பியோடி ஒரு வழியாக அமெரிக்காவைச் சென்றடைகிறாள்.

ஒரு புளியமரத்தின் கதை

இரண்டாண்டுகளை எட்டிவிட்ட எங்கள் வாசகர் வட்டத்தின் கொண்டாட்டம்.  "அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு. விசாலப்பார்வையால் விழுங்கு மக்களை" என்றான் பாரதிதாசன். வாசிப்பு அதனை செய்கிறது. ஒரு பள்ளியோ, குடும்பமோ முழுவதுமாக கொடுத்திட முடியாத அந்த அனுபவத்தை வாழ்க்கையும் வாசிப்பும் தருகின்றது. இந்த மாதம் எங்கள் கைகளில் தவழ்ந்த புத்தகம் சுந்தர ராமசாமி அவர்களின் "ஒரு புளியமரத்தின் கதை".   முதல் பதிப்பை 50 ஆண்டுகளுக்கு முன்னர் வாசிக்கும் வாய்ப்பு பெற்ற மூத்த எழுத்தாளர் திரு.முருகபூபதி அய்யா, தனது நினைவில் மாறாது நின்ற சில காட்சிகளை பகிர்ந்துகொண்டார். அவரைத் தொடர்ந்து மற்ற வாசகர்களும் தத்தம் கருத்துகளை எடுத்துரைத்தோம். ஒரு நாவல் 50 சொச்சம் ஆண்டுகளைத் தாண்டியும் உயிரோட்டத்தோடு இருப்பது எளிதல்ல. மூன்று கால கட்டங்களில், அதாவது பிரபுத்துவம், காலனிய ஆட்சி மற்றும் ஜனநாயக ஆட்சி முறைகளைத் தாண்டி நிற்கும் அந்த புளிய மரம் ஒரு வரலாற்று சான்றாகவே திகழ்ந்திருக்கிறது. அத்தனை மாட்சிமையோடு இருந்த அந்த விருட்சம், தனி மனிதனின் வக்கிரங்களினால் தூண்டப்பட்டு, இரு வியாபாரிகளிடையே ஏற்படும் போட்டி மற்றும் பொ