முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்நதியின் "காத்திருப்பு"

அமெரிக்க எழுத்தாளர் ஜோடி பிக்கோவின் ‘The Story Teller’ என்ற நாவலில் மின்கா என்கின்ற ஒரு மூதாட்டியின் பாத்திரம் வருகிறது. மின்காவும் அவள் நண்பியான தரீஜாவும் தம்முடைய பதின்மங்களில் ஓஸ்விச் வதை முகாமில் நாசிக்களினால் அடைக்கப்படுகிறார்கள். முகாம் வாழ்க்கையில் மின்கா கதைகளை எழுத ஆரம்பிக்கிறாள். அக்கதைகள் அவளுக்கு மாத்திரமின்றி அந்த முகாமில் சிறைபிடிக்கப்பட்டிருந்த பலருக்குமே வடிகாலாக அமைந்துபோயின. ஆரம்பத்தில் அவள் கதைகளில் ஈர்க்கப்பட்ட ஒரு நாசிக் காவலன் மின்காவுக்கு போர்வையும் உணவும் கொடுக்க ஆரம்பிக்கிறான். ஆனால் ஈற்றில் அந்தத் தொடர்பே மின்காவின் நண்பி தரீஜாவின் மரணத்துக்கும் காரணமாகிவிடுகிறது. மின்காவும் கொலைக்களத்துக்கு அனுப்பப்பட்டாலும் இறுதிக்கணத்தில் எப்படியோ தப்பியோடி ஒரு வழியாக அமெரிக்காவைச் சென்றடைகிறாள்.

மெல்பேர்ன் வாசகர் வட்டம் முதல் சந்திப்பு

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் மெல்பேர்ன் வருகையின்போது வாசிப்பின் வாசனை எனும் தலைப்பில் ஒரு கூட்டத்தில் சிறிய நூலாக இரா. நடராஜன் அவர்களின் 'ஆயிஷா'வை அறிமுகம் செய்து மிக பெரிய தாக்கத்தை வாசகர்களிடம் ஏற்படச் செய்தார். அது மட்டுமின்றி வாசகர் வட்டம் எனும் தலைப்பில் வாசகர்கள் ஒரு நூல் குறித்து தங்களது கருத்துகளைப் பறிமாற்றம் செய்துகொள்ள வசதி செய்துதந்தார். அப்படி அவரால் அறிமுகம் செய்யப்பட்ட வாசகர் வட்டம் இரண்டாவது அமர்வாக தொ.ப அவர்களின் அறியப்படாத தமிழகம் எனும் ஆய்வு நூலை மையப்படுத்தி பல கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடிந்தது வாய்பை உருவாக்கிய MK அவர்களும் இனிமையுடன் இடமளித்த திருமதி சாந்தி சிவா அவர்களுக்கும் நன்றிகள் பல பல. - ராஜா