முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்நதியின் "காத்திருப்பு"

அமெரிக்க எழுத்தாளர் ஜோடி பிக்கோவின் ‘The Story Teller’ என்ற நாவலில் மின்கா என்கின்ற ஒரு மூதாட்டியின் பாத்திரம் வருகிறது. மின்காவும் அவள் நண்பியான தரீஜாவும் தம்முடைய பதின்மங்களில் ஓஸ்விச் வதை முகாமில் நாசிக்களினால் அடைக்கப்படுகிறார்கள். முகாம் வாழ்க்கையில் மின்கா கதைகளை எழுத ஆரம்பிக்கிறாள். அக்கதைகள் அவளுக்கு மாத்திரமின்றி அந்த முகாமில் சிறைபிடிக்கப்பட்டிருந்த பலருக்குமே வடிகாலாக அமைந்துபோயின. ஆரம்பத்தில் அவள் கதைகளில் ஈர்க்கப்பட்ட ஒரு நாசிக் காவலன் மின்காவுக்கு போர்வையும் உணவும் கொடுக்க ஆரம்பிக்கிறான். ஆனால் ஈற்றில் அந்தத் தொடர்பே மின்காவின் நண்பி தரீஜாவின் மரணத்துக்கும் காரணமாகிவிடுகிறது. மின்காவும் கொலைக்களத்துக்கு அனுப்பப்பட்டாலும் இறுதிக்கணத்தில் எப்படியோ தப்பியோடி ஒரு வழியாக அமெரிக்காவைச் சென்றடைகிறாள்.

அறியப்படாத தமிழகம்

3வது வாசகர் வட்ட சந்திப்பை எதிர்பார்த்து ஞாயிறு மலர்ந்தது. அறிந்த முகங்களுடன் சில புதிய முகங்களும் புத்தகமும் புன்னகையுமாக வந்து அமர்ந்தனர். ஒரு சிறிய தன் அறிமுகத்தோடு கலந்துரையாடல் துவங்கியது. வாசகர் வட்டத்தின் செயல்பாட்டையும், அன்று பேசப்போகும் புத்தகத்தின் முன்பே பரிமாறிக்கொண்ட கருத்துகளையும் புதியவர்களுக்காக ஒருமுறை மீள்பார்வை பார்த்துவிட்டு மூன்றாவது அத்தியாயத்தை எடுத்துக்கொண்டோம்.   புத்தகம் எழுத்தாளர் தொ.ப. அவர்களின் "அறியப்படாத தமிழகம்'.   "தைப்பூசம்", பல நூற்றாண்டுகளாக இவ்விழா கொண்டாடப்பட்ட வரலாற்றை நூலாசிரியரின் ஆய்வுக் குறிப்போடு, இன்று தமிழ் நாட்டிலும் மற்றும் தமிழர்கள் வாழும் அயல் நாடுகளிலும் எவ்விதம் கொண்டாடப்படுகிறது என்று நிறைய கருத்துகளும், கேள்விகளும் முன்வைக்கப்பட்டது. அடுத்து "பல்லாங்குழி". தமிழர்களின் பண்டைய விளையாட்டுக்கள் , அதன் உட்கருத்து, வெற்றி, தோல்வி, சூதாட்டம் என பல புள்ளிகளில் வாசகர்கள் தங்கள் கருத்துக்களை விதைத்தனர். பேச்சின் சுவாரசியமும், கருத்துக்களின் ஆழமும் நேரத்தை விழுங்கிவிட்டன என்றே சொல்லவேண்டும். கலந்துகொண்ட அனைவரும் த...